சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்பரை

தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அனர்த்த நிலைகளுக்கு முகம்கொடுப்பதற்காக முன்கூட்டியே தயார் நிலைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
