Home » சீரற்ற காலநிலையினாhல் ஐயாயிரத்து 212 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 888 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையினாhல் ஐயாயிரத்து 212 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 888 பேர் பாதிப்பு

Source
Share Button

சீரற்ற காலநிலையினால் ஐயாயிரத்து 212 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயெ அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை இன்னும் இரண்டு தினங்களுக்கு தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தனகலுஓயா, களனி கங்கை, களு கங்கை உள்ளிட்ட பிரதேசங்களில் தாழ்நில பகுதிகளில் சிறியளவான வெள்ள எச்சரிக்கை நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. மழையுடன்கூடிய காலநிலை தொடருமாயின் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. களனி கங்கையின் தாழ்நில பிரதேசங்களிலும வெள்ள அபாயம் நிலவுகிறது. களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதினால் தியகம பொலிஸ் பிரிவுக்குட்ட வீதிகள் சில நீரில் மூழ்கியுள்ளன.

மல்வாணை யபரெலுவ வடக்கு, யபரெலுவ தெற்கு, தியகம கிழக்கு மற்றும் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 682 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தியகம – களனி வீதியின் பண்டாரவத்த சந்தியில் இருந்து ரக்கஹவத்தை பாலம் வரையான பகுதியும் பண்டாரவத்த சந்தியில் இருந்து மல்வாணை முச்சந்தி வரையும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஏற்படும் வாகன நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழிகளை கையாளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image