பெப்ரவரி 4ஆம் திகதியை தமிழரின் இருள்நாளாக மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினம் தமிழர்களிற்கு மட்டுமன்றி இலங்கை வாழ் மக்கள் அனைவரிற்குமே இன்று இருள் நாளாகவே உள்ளது.
இதன் அடிப்படையில் பெப்பரவரி 4ஆம் திகதியை இருள் நாளாக கடைப்பிடிப்பதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மால் ஓர் கறுப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேநேரம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அன்றைய போராட்டத்திற்கும் எமது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றார்.
TL