கடந்த 4ம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் தமிழ்ர்களுக்கான தீர்வு விடயங்களை முன்நிறுத்தி யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து மேற்கொண்டுவரும் பேரணியானது இன்றைய தினம் திரியாயில் இருந்து ஆரம்பமாகியது.
இப்பேரணிக்கு ஆதரவு வழங்கும் முகமாக பேரணி வலம்வரும் இடங்களில் பல அமைப்புகள், அரசியற் கட்சிகள் பேரணியில் இணைந்து கலந்துகொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் திரியாயில் வைத்து தாயகம் மற்றும் புலத்தில் வாழும் போராளிகள் சார்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் இப்பேரணிக்கு ஆதரவு வழங்கும் முகமாக பேரணியில் இணைந்து கொண்டனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தலைமையிலான குழுவினரே இவ் ஆதரவு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் மற்றுமொரு குழுவினர் இப்பேரணிக்கு ஆதரவாக நாளைய தினம் அம்பாறையில் இருந்து வரும் குழுவினருடன் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
AR