Home » சுதந்திர தின கொண்டாட்டம் தேவைதானா?கேள்வி எழுப்புகின்றார் விஸ்ணுகாந்தன்!

சுதந்திர தின கொண்டாட்டம் தேவைதானா?கேள்வி எழுப்புகின்றார் விஸ்ணுகாந்தன்!

Source
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்களின் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் தேவைதானா என கேட்டவேண்டியிருக்கின்றது என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். மட்டக்களப்பில் செவ்வாய்கிழமை (31) திகதி இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு செலவு செய்யப்போகின்ற பணத்தை செலவு செய்வதற்கு பிற்பாடல்ல செலவு செய்வதற்கு முன்னர் அந்த பணத்தின் பெறுமதியை அரசாங்கம் திரும்பிப் பார்க்க வேண்டும். ஏன் என்றால் இந்த நாட்டில் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்றவை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மக்கள் பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளனர் இவ்வாறு இருக்கும்போது நாட்டில் தற்போது சுதந்திர தின கொண்டாட்டம் தேவைதானா என அனைத்து மக்களிடமும் எழும் கேள்வியாக இருக்கின்றது. பொதுவாக சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்களல்ல  இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களும் சேர்ந்து தேசியகீதத்தைப்பாடி தேசிய கொடியை ஏற்றி சாதாரணமான முறையில் நடாத்தினால் இந்த பணத்தினை நாட்டின் ஏனைய செலவுகளுக்கு வழங்கலாம். இவ்வாறு இந்த அரசாங்கம் செய்திருந்தால் அனைத்து மக்களும் அரசாங்கத்தின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். தற்போது சுகாதார துறையை எடுத்தால் வைத்தியசாலைகளில் பல மருந்துகள் இல்லை தனியார் பாமசிகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில மருந்துவகைகள் தனியார் பாமசிகளிலும் இல்லை. நாட்டில் தற்போது மக்கள் பாதிப்படைந்துள்ளனர், மாணவர்களுக்கு கொப்பிகள், புத்தகங்கள் வாங்கமுடியாதவாறு விலைகள் பல மடங்கு அதிகரித்துளளது, அதேபோன்று எரிபொருள் பிரச்சனை, மருந்து தட்டுப்பாடு இவ்வாறு பல பிரச்சனைகள் இருக்கும்போது, சுதந்திர தினத்திற்கு செலவு செய்யயும் பெருந்தொகை பணத்தினை இவ்வாறான சுகாதாரத் துறைக்கோ அல்லது கல்விக்கோ செலவு செய்யலாம் இவ்விடயம் பற்றி ஜனாதிபதியும் பிரதமரும் கூடி உடனடியாக நல்லதோர் தீர்மானம் எடுக்கவேண்டும். கடந்த காலத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளியாக இருந்தோம் பின்னர் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளியாக இருந்தோம் இன்று இவர்களுக்கு ஆதரவு வழங்கமுடியாது, ஏன் என்றால் இவர்களுக்கு தினமும் ஆதரவு வழங்குவதாக இருந்தால் மக்களை பகைக்கவேண்டி வரும் இவர்களுடைய ஆதரவை தவிர்த்து நாங்களும் மக்களுடன் பயணிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம். இந்த நிலையில் மக்களின் நன்மை கருதி முற்று முழுதாக இந்த சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வை நிராகரிக்கின்றோம். நாட்டில் பொருளாதார நிலை சரியானதொரு சூழ்நிலைக்கு வரும் வரைக்கும் சுதந்திர தின விழாவை மறந்து நாட்டை வளப்படுத்தி கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என தெரிவித்தார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image