75 ஆவது சுதந்திர தின நிகழ்விற்கான ஒத்திகை இடம்பெறுவதனால் இன்று முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும். குறித்த தினங்களில் அதிகாலை 5 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுற்படுத்தப்படும் என பொலிஸ் ஊடாகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, காலிமுகத்திடல் வீதி, கொள்ளுப்பிட்டி, சாந்த மைக்கல் சுற்றுவட்டம், கொம்பனி வீதி, பம்பலப்பிட்டி உள்ளிட்ட சில வீதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும். ஆகையினால், சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.