Home » சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்

Source
Share Button

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இலங்கை சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் எடை ஆயிரத்து 200 கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் ஆறாயிரத்து 960 கிலோ கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொஸ்ஹின்ன சந்திக்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அனுமதிப்பத்திரம் இன்றி, கழிவு தேயிலையை லொறியில் ஏற்றிச் சென்ற முருதகஹ-முல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image