Home » சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த வருடத்தில் புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த வருடத்தில் புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை

Source
Share Button

சுற்றுலாத் தொழில் துறையினை அபிவிருத்தி செய்வதற்கு விரைவான வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 2023ஆம் ஆண்டை அடையும் போது 8 லட்சத்து 50 அயிரம் சுற்றுலாப்பயணிகளை அழைத்து வருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாத்துறை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயும் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்திருக்கிறார். சர்வதேச ரீதியில் இலங்கை பற்றிய நல்லெண்னத்தை ஏற்படுத்தல் உட்பட பல வேலைத்திட்டங்கள் பற்றி இதன்போது ஆராயப்பட்டன. வெளிநாட்டு விமானங்களை தரையிறக்கும் போது அறவிடப்படும் அதிக கட்டணம் பற்றிய பிரச்சினைகளை தீர்ப்;பதற்கான நடவடிக்கை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலாத்தளங்கள் உட்பட சுற்றுலாத்துறைக்கு சேவை வழங்கும் விடயங்களை உள்ளடக்கியதான கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்று அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதன்போது கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image