சுற்றுலா அயர்லாந்து கிரிக்கெற் அணிக்கும் இலங்கை அணிக்கமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இனிங்சினாலும், 280 ஓட்டங்களாலும் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி சகல விக்கெற்றுகளையும் இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. முதல் இனிங்சில் அயர்லாந்து அணி 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதேவேளை, இலங்கை அணி தனது முதல் இனிங்சில் 591 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.