சுற்றுலா வீசா மூலம் வீட்டுப் பணிப்பெண்களை டுபாய்க்கு ஊடாக ஓமானுக்கு அனுப்பிய விவகாரம்

சுற்றுலா வீசா மூலம் வீட்டுப் பணிப்பெண்களை டுபாய்க்கு ஊடாக ஓமானுக்கு அனுப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆஷா திசாநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆஷா திசாநாயக்காவின் பிணையை ரத்துச் செய்யுமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் நீதவான் நந்தன அமரசிங்க நேற்று உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈ குஷான் என்பவரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளது.
