சுவாச மற்றும் இன்புளுவன்ஸா நோய்த் தொற்று அதிகரிப்பு

சுவாச நோய், இன்புளுவென்சா நோய் என்பன தற்சமயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். சுவாசிப்பதில் சிரமம்;, சளி போன்ற அறிகுறிகளை தற்சமயம் அவதானிக்க முடியும். இரண்டு வாரங்களுக்கு மேல் சளி நீடிக்குமாயின், உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும். கொரோனா வைரஸ் பரவலினால் சுவாசம் நோய்களும் அதிகரித்துள்ளன. இந்த நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு முறையான சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியமாகும். புகைத்தலை தவிர்த்தல், செல்லப்பிராணிகளிடமிருந்து தூரமாக செயற்படுதல், ஆடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளல் என்பன அவசியமாகும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசங்களை அணிந்து செல்லுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சுவாச நோய் தொடர்பான ஆரம்ப பரிசோதனை கிராமிய வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
