சூடானில் நிலவும் யுத்தம் காரணமாக, அங்கிருக்கும் இலங்கையர்களில் மூன்றாவது குழுவினர் ஜெடா நகருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் 11 இலங்கையர்கள் அடங்குகின்றனர். சூடானிலிருந்து 31 இலங்கையர்கள் இதுவரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
சூடான் அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலினால் இதுவரை 500 பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திரக்கிறார்கள்.