சூடானில் உள்நாட்டுக் கலவரம் இடம்பெறுவதனால் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு பிரதேசங்களில் மக்கள் அடிப்படை வசதகள் இன்றி அவதிப்படுகின்றனர். குடிநீர் விநியோகமும் முறையாக இடம்றொமையினால் மக்கள் குடிநீரை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். மருத்துவ மனைகளிலும் முறையான சேவை இடம்பெறாமையினால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மோதல்கள் இடம்பெறாத பிராந்தியங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் இது அகதிகள் நெருக்கடியாக உருவெடுக்கும் என்று மனிதாபிமான அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.