தமிழ்நாடு இராமேஸ்வரம் கடற்கரையில் செய்மதி தொலைபேசியுடன் நடமாடியவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமேஸவரம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவிலேயே பொலிசார் இவ்வாறு செய்மதி தொலைபேசியுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
செய்மதி தொலைபேசி இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் இயங்கு நிலையிலான தொலைபேசியை வைத்திருந்த சமயமே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு இந்தியப பிரஜை வைத்திருந்த செய்மதி தொலைபேசியானது இலங்கைப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமானது எனவும் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மறைத்து வைத்திருந்த சமயம பிணிக்கப்பட்ட இந்த தொலைபேசியுடன் கொழும்பை முகவரியாக கொண்டவரது அடையாள அட்டையும் நீதிமன்ற கடிதம் எனபனவும் தமிழக பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
TL