சேமநலத்திட்ட உதவிகளை பெற தகுதியானவர்களை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்

சேமநலத் திட்ட உதவிகளைப் பெறத் தகுதியானவர்களைக் இனங்காணும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாக, நிதி அமைச்சின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைப் பிரிவின் பிரதி திறைச்சேரி செயலாளர் ஆர்.எம்.பி.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் முறையான நலன்புரி திட்டத்தை செயற்படுத்த முடியும். நலத்திட்டங்களுக்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 134 பில்லியன் ரூபாவை செலவிடுகின்றது.
