சைப்ரஸ் நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடொலிடஸ் அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனுபவமிக்க அரசியல்வாதியான ஆண்ட்ரியாஸ் மௌரொயியனிஸை விட, நிகோஸ் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின்படி, நிகோஸ் சுமார் 52 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். வாழ்க்கைச் செலவு நெருக்கடி, ஒழுங்கற்ற குடியேற்றம் மற்றும் துருக்கியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சைப்ரஸின் வடக்குப் பகுதியில் குடியேற்றம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தற்போதைய தலைவர் தீர்வு காண வேண்டியுள்ளது.