இந்தியா ஆதிச் சமயமாகிய சைவசமயத்தையும் சைவாலயங்களையும் பாதுகாப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தோரால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் அறிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இது தொடர்பில் அவரது தலைமையில் நல்லை ஆதீனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்,
இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நீதி வழங்கும் முறைமையில் தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய சந்தேகம் நிலவுகின்றது. ’ஒரேநாடு ஒரேசட்டம்’ என்ற கொள்கை பின்பற்றப்படுவதில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்கிறார்கள்.
இலங்கையில் மதமாற்றத் தடைச்சட்டம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
அண்மையில் கிறிஸ்தவப் போதகராகிய அருட்தந்தை சக்திவேல், ஆனையிறவில் நடராசர் வடிவ சிலை வைக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகைகளில் அறிக்கை விட்டதுடன் சிவபூமியாக வடக்கு கிழக்கை சிலர் மாற்ற முயற்சி செய்கிறார்கள் என எள்ளி நகையாடியமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கைக்குரிய ஒரு சைவத்தமிழ் பெயர் சிவபூமி. அவரது கூற்றுக்கு சபையினர் முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கையிலிருந்து வரும் அரசியல் தலைவர்கள் மேற்குறித்த பிரச்சினைகளுக்கு பதில்தராவிடில் அவர்கள் வடக்கே வரும் போது அவர்களின் சந்திப்புக்களை சைவசமயத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன=
என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TL