Home » சைவ சமயத்தவர்களிற்கான அநீதியை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு.

சைவ சமயத்தவர்களிற்கான அநீதியை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு.

Source
சைவர்களின் இடங்களினை தொல்லியல் திணைக்களத்தினர் அபகரிக்கின்றமை வேதனையளிக்கின்றது என அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார். நல்லை திருஞான சம்பந்தர் ஆதினத்தில் இன்று  இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், சைவர்கள் என்றுமில்லாதவாறு இக்கட்டான சுழலிற்கு தள்ளப்பட்டுள்ளனர். கேதீஸ்வரத்திற்கு அருகிலுள்ள சிறாப்பர் மடத்தில் தற்காலிக அலுவலமாக தொல்லியல் திணைக்களம் குடிகொண்டுவிட்டது. கீரிமலை கேணி புனரமைக்க தொடங்கிய  பொழுது அவர்கள் அதில் தலையிட்டனர். இப்பொழுது சிறாப்பார் மடத்தினை புனரமைப்பதாக அங்கு நிரந்தரமாக குடிகொண்டுள்ளனர். இவ்வாறாக சைவர்களின் இடங்களினை தொல்லியல் திணைக்களத்தினர் அபகரிக்கின்றமை  வேதனையளிக்கின்றது. பௌத்தர்களே இடையூரினை ஏற்படுத்துவதாக எண்ணுகின்றோம் ஆனால் கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு செய்கின்றார்கள் என்பதை பல பேர் சொல்ல மறுக்கின்றனர். அவர்கள் போரினை பயன்படுத்தி  அந்நிய மதத்தினை கிளிநொச்சி,முல்லைதீவு,யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் கெட்டி தனமாக மதமாற்றலை மேற்கொள்ளுகின்றனர். யாக்கப்பர் புரம் ,சமாதான புரம் என கிளிநொச்சிக்கு அருகில் பல புது ஊர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர்கள் யார்? மக்கள் இல்லாத காணிகளை ஆக்கிரமித்து அதில் சிலைகள், சொரூபங்கள் போன்றவற்றை வைத்துள்ளனர். அது மட்டுமன்றி அண்மையில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், வடக்கு கிழக்கை சிவபூமியாக பிரகடனப்படுத்தும் செயற்பாடு தான் நடேசர் வைக்கப்பட்டது அதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் அது பத்திரிகையிலும் பிரசுரமானது இது ஒரு வேதனையான விடயம். திருக்கேதீஸ்வரத்தில் ஒரு குழியினை வெட்டினாலும் தொல்லியல் திணைக்களம் கவனிக்கின்றது அல்லது கிறிஸ்தவ அமைப்புக்கள் அங்குள்ள  நகரசபையினை உடனடியாக அனுப்புகின்றனர். மன்னாரிலுள்ள பிள்ளையாரும் கை , கால் முறிந்தபடியுள்ளார். அதனை கேட்பார் யாருமில்லை. எம்முடை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து குரலெழுப்புவதில்லை. மாறாக தமது மதங்களிற்கு பிரைச்சினை வரும் பொழுது மட்டுமே குரல் கொடுக்கின்றனர். கோணேஸ்வரத்தில் சிங்கள அரசியல்வாதியொருவர் வலுக்கட்டாயமாக இருத்திய பெட்டி கடையை கடந்த 6 மாதங்களிற்கு முன்னர் நிரந்தரமாக கட்ட திட்டமிட்ட பொழுது ஆலய நிர்வாகத்தினர் எமக்கு தெரியபடுத்தியதை தொடர்ந்து நரேந்திர மோடி அவர்களிற்கு தெரியப்படுத்தி அடுத்த வாரமளவில் இந்திய துணை தூதுவரை கோணேஸ்வரத்திற்கு அழைத்து சென்று குறித்த பெட்டி கடையை நிரந்தரமாக அமைப்பதை நிறுத்தியதுடன் சட்டப்பூர்வமாக அங்கிருந்து செல்லுமாறு கூறிய போதிலும் அவர்கள் அசையவில்லை என்றார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image