சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத கட்சிகளுக்குஇ தேர்தல் ஆணைக்குழு 14 நாட்கள் கால அவகாசம்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான பேச்சுவார்த்தை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்கழு தெரிவித்துள்ளது. கூட்டம் அன்று முற்பகல் பத்து மணிக்கு ஆரம்பமாகும். இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்றும் நடைபெற்றது. இதன்போது சொத்து விபரங்கள் பற்றி அறிவிக்காத அரசியல் கட்சிகளுக்கு, அந்த தரவுகளை வழங்குவதற்கு 14 நாட்கள் காலவகாசம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
