சொலமன் தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சொலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. சொலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில், சொலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.