மோட்டார் வாகன சட்டத்தின் கீழான மூன்று உத்தரவுகள் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன. ஜனநாயகத்தை பலப்படுத்தவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன விவாதத்தின்போது தெரிவித்தார். எவரையும் பழி வாங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பில்லை. அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்; தேர்தலை பிற்போடாது என்றும் பிரதமர் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்டினெடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து கட்சி வேறுபாடின்றி சகலரது ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு கிடைக்கும் நிதி சம்மந்தமாக எதிர்க்கட்;சி சந்தோஷம் அடைய வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மோட்டார் வாகன திணைக்களத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுப்பதற்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன விவாதத்தின்போது கூறினார்.