ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள வாக்கெடுப்பு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் சகல தரப்புக்களையும் கேட்டுள்ளார். சட்ட பூர்வமான முறையின் கீழ் இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
ஜனநாயக அடிப்படையில் இந்தத் தேர்தலை நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
