ஜனாதிபதி இம்மாத இறுதிப்பகுதியில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாத இறுதிப்பகுதியில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள இருக்கின்றார். இதன்போது அவர் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்துப் பேசவுள்ளார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபேயின் சம்பிரதாயபூர்வமான ஈமைக்கிரியை நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்பார். இறுதிக் கிரியைகள் ஜப்பானில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
