ஜனாதிபதி இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து.

அவுஸ்திரேலிய அணியுடனான 3 ஆவது ரி-20 போட்டியில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட விசேட வெற்றிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ ரியூட்டல் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். இந்த வெற்றி ஒரு சிறந்த வெற்றியாகும். அணித் தலைவர் கசுன் சானக்க உள்ளிட்ட அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அதில் குறி;ப்பிட்டுள்ளார்.
