ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை கட்டியெழுப்பவதற்காக முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ராஜாங்க அமைச்சர்கள் ஒத்துழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை கட்டியெழுப்பவதற்காக முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தமக்கு சம்பளமோ ஏனைய வரப்பிரசாதங்களோ தேவையில்லை என நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது இந்தச் சந்தர்ப்பத்தில் முக்கிய விடயமாகும். இதற்காக ராஜாங்க அமைச்சர்கள் என்ற வகையில் அரசாங்கத்தின் பொறுப்புக்களை ஏற்று ஆதரவு வழங்க தாம் எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
