ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுத் தூதுவர்களை நேற்றுச் சந்தித்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்துள்ளார். கொழும்பில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
