ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி
ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைவடைந்துள்ளது. கடந்த வருத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் குழந்தை பிறப்பு 4.9 வீதத்தினால் குறைவடைந்திருக்கிறது. குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் பல்வேறு மானியங்களை அறிவித்துள்ள போதும், குழந்தை பிறபபு வீதம் தொடர்ச்சியாக வீழச்;சி அடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.