ஜிஎஸ்பி சலுகையை பெறுவதற்கு சர்வதேசத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை

ஜீ.எஸ்.பி சலுகையை இலங்கைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் சர்வதேசத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்காக மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மேம்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே அந்த நிவாரணம் நாட்டுக்கு கிடைக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் ஆலோசிக்கப்படுகிறது இது தொடர்பில் ஜப்பானும் கலந்துரையாடியுள்ளது.
எனினும் ஒரு உறுதியான முடிவுக்கு வர சிறிது காலம் பிடிக்கும்.
கடன் மறுசீரமைப்பு என்பது அத்தியாவசியமான விடயம் என்பதால் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இரட்டைக் குடியுரிமையை தேடும் முறை அரசாங்கத்திடம் இல்லை என குறிப்பிட்டார்.
அதனை நீதிமன்றமே தேட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தொலைக்காட்சி ஒருபோதும் விற்பனை செய்யப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
அங்கு அதிகளவானோர் பணி புரிகின்றனர். அதன் கடன் தற்போது ஒரு பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. எனவே, அங்குள்ள வெற்று காணியை குத்தகைக்கு வழங்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும் தனியார் துறையுடன் எந்த உடன்பாடிக்கையும் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
