உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை மேலும் கீழிறங்கியுள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் தயாரித்த அறிக்கையின்படி, சுட்டெண்ணில் இலங்கை 18வது இடத்திற்கு கீழே வீழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் சிம்பாவேவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. அதிக பணவீக்க பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டமை மிகவும் சாதகமான நிலைமை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
95 சதவீதமாக இருந்த பணவீக்கம் 50 சதவீதமாக குறைந்துள்ளது. எதிர்வரும் டிசம்பருக்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்கு. மேலும் இது இந்த நாட்டின் பொருளாதார வளத்திற்கு மிகச் சிறந்த உதாரணம்.
அதன் பிரகாரம் இந்நாட்டின் பொருளாதார செயற்பாட்டின் முன்னேற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.