Home » டிசெம்பர் மாதம் வரை கடவுச்சீட்டை வழங்கும் ஒருநாள் சேவைக்கான நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

டிசெம்பர் மாதம் வரை கடவுச்சீட்டை வழங்கும் ஒருநாள் சேவைக்கான நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Source
Share Button

எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரை கடவுச்சீட்டை வழங்கும் ஒருநாள் சேவையில் நாட்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக குடிவரவு-குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் ஒருநாள் சேவையின் ஊடாக கூடுதலாக பணம் செலுத்தி காலையில் விண்ணப்பப்படிவங்களை கையளித்துவிட்டு மாலையில் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ளக்கூடியதாகக் காணப்பட்டது. ஒருநாளைக்கு சுமார் 5 ஆயிரம் விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப் பெறுவதால் ஒருநாள் சேவையில் தாமதம் ஏற்படுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் தேசிய வானொலிக்குத் தெரிவித்தார். அவசர சந்தர்ப்பத்தின்போது மாத்திரம் அதற்கான ஆவணங்களை கையளிக்கும் பட்சத்தில் அதே நாளில் கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image