Home » டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தி;ற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தி;ற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Source
Share Button
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்த்திற்கு ஒத்துழைப்பு வழங்காத தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் எதிராக சடட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜயசிறி தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் தற்போது டெங்கு எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் கொழும்;பு, கொத்தொட்டுவ, பிலியந்தல, கடுவல, மஹகரமக ஆகிய பிரதேசங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப் பட்டிருக்கிறார்கள். டெங்கை கட்டுப்படுத்துவதற்காக கிராமிய குழுக்களை பலப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் அடுத்த மாதத்தில் டெங்கு மிகுந்த தொற்று நிலையை தோற்றுவிக்கக் கூடும் என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதனால் வருடாந்தம் ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடி சிகிச்சை பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image