தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த அரசாங்கம் விரிவான திட்டம்

நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை உருவாகி வருகிறது. அதற்கான பரந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் 1.500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்ட முடிந்தது. தகவல்தொழிநுட்பத்;;;; துறையில் பொது மற்றும் தனியார் துறையில் சுமார் இருபதாயிரம் வெற்றிடங்கள் உள்ளன
தேவையான இளைஞர் தொழிலாளர்களை வழங்குவது தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொறுப்பாகும். அதன்படி, உயர்தர கலைப் பிரிவில் தகவல் தொழில்நுட்பம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது
இதற்காக 700 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ருNஐஊநுகு ஒத்துழைப்பு வழங்கும்.
டிஜிட்டல் கல்விக் கொள்கை உருவாக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப விரிவுரைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் 34 ஆயிரம் இளைஞர்களை களம் இறக்கும் திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டார்.
