Home » தபால் அலுவலகங்கலில் பில் கட்டணங்களை செலுத்துவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு!

தபால் அலுவலகங்கலில் பில் கட்டணங்களை செலுத்துவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு!

Source

இலங்கை தபால் நிலையங்கள் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான கட்டணத்தை அதிகரித்துள்ளன.

அதன்படிதபால் அலுவலகங்கள் மூலம் தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதற்கு முன்பு வசூலிக்கப்பட்ட , 05 ரூபாய் 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகங்கள் மூலம் மின்கட்டணத்தை செலுத்தவும் எதிர்காலத்தில் ரூ. 20 அறவிடப்படும்.

முன்னதாக, இலங்கை மின்சார சபையானது தபால் திணைக்களத்திற்கு மின் கட்டணத்திற்காக 02 வீதத்தை செலுத்தியிருந்த நிலையில், தற்போது 01 வீதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தில் அதிகரித்துள்ள செலவுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து தபால் மா அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image