தபால் வேலை நிறுத்தம் முடிவடைந்துள்ளது
தபால் திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. திணைக்களத்தின் ஊழியர்கள் வழமையான முறையில் நேற்று சேவைக்கு திரும்பியதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டாலும் கடந்த சில நாட்களாக வழமையான முறையில் தபால் பொதிகளின் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.