இந்தியாவின் தமிழகத்தில் காணப்பட்ட விடுதலைப்புலிகளின் மாவீரர் லெப்ரினன்ட் போசனின் கல்லறையை நேற்றையதினம் தி.மு.க அரசு இடித்தழித்துள்ளதாக தமிழர் நல பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் வட்டுவாசல் இடுகாட்டில் இருந்த மாவீரர் கல்லறை தஞ்சை மாநகராட்சியினரால் நேற்றைய தினம் இடிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே மு.களஞ்சியம் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையினால் உள்ளூர் அரசியலில் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் மத்மியிலும் கடும் அதிருப்தி நிலவுவதோடு கடந்த 34 ஆண்டுகளாக இருந்த நினைவுத் தூபியை இலங்கை அரசை ஒத்த வடிவில் தமிழக அரசும் இடித்தழிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
1989ஆம் ஆண்டு யூன் மாதம் யூன் மாதம் 27ஆம் திகதி தஞ்சாவூரில் மறைந்திருந்த சமயம் பொலிசார் சுற்றி வளைக்க முற்பட்ட சமயம் சயனைட் உட்கொண்டு உயிர் துறந்த லெப்ரினன்ட் போசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டு கி.விரமணி அவர்களால் நினைவிடம் அமைக்கப்பட்ட நிலையில் இன்று இடித்தழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
TL