Home » தமிழகம் சென்ற அகதிகள் 30 மணிநேரம் உணவு நீர் இன்றித் தவிப்பு.

தமிழகம் சென்ற அகதிகள் 30 மணிநேரம் உணவு நீர் இன்றித் தவிப்பு.

Source

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 05 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றவர்கள் 30 மணிநேரத்தின் பின்பு இந்திய கரையோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு வழியாக தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையில் உள்ள 5ஆம் திட்டில் தரை இறக்கி விடப்பட்டுள்ளனர். இவர்களை அவதானித்த தமிழக மீனவர்கள் 6ஆம் திகதி காலை  மறாயன் பொலீஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அகதிகள் நின்றதான  இடத்திற்கு சென்றதாக  இந்திய கரையோர காவல்படைக்குச் சொந்தமான படகு அகதிகள் எவரும் தீவில் இல்லையெனத் துரும்பியுள்ளனர். இருந்த போதும் இன்று காலை மீண்டும் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்களை  மீட்டு இராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அகதிகள் தற்போது பொலிசாரின் விசாரணையில் உள்ளனர்.

இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்களில்   ஒரு ஆண்,  ஒரு பெண்   மற்றும் 03  சிறுவர்கள் அடங்குகின்றனர்.

6ஆம் திகதி அதிகாலை  இறக்கிவிடப்பட்டதில் இருந்து 7ஆம் திகதி 10 மணிவரை உணவு தண்ணீர் இன்றித் தவித்ததாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image