இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தப்பிச் செல்ல முற்பட்ட 9 பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் தாழ்பாடு கடற்பகுதியூடாக படகு மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட 7 பேரும் அவர்களை ஏற்றிச் செல்ல உதவிய இரு படகு ஓட்டிகளுமாகவே மொத்தம் 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் வவுனியா மாவட்டத்தையும் மூவர் பதுளை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் தற்போது மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.