Home » தமிழகம் தழுவிய போராட்டம் நடத்த  ராமேஸ்வர மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் 

தமிழகம் தழுவிய போராட்டம் நடத்த  ராமேஸ்வர மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் 

Source
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் தங்கச்சிமடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க மாவட்ட செயலாளர் யேசுராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் ஆய்வு குழு ஒன்றை ஏற்படுத்தி அந்த குழுவினரை இலங்கைக்கு அனுப்பி படகுகளை ஆய்வு செய்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்க முடியாத படகுகளுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு முன்பு பிடிபட்டு மீட்க முடியாமல் போன படகுகளுக்கு அரசு அறிவித்த 5 லட்ச ரூபாய் இழப்பீடு, 20 படகுகளுக்கு வழங்கப்படாமல் விடுபட்டு உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் வளத்தை காக்கவும், மீனவளத்தை பெருக்கவும் தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருநாட்டு மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் எந்த பிரச்சனையும் ஏற்படாத நிலையை ஏற்படுத்த வேண்டும். மீனவர்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க விட்டால், தமிழக முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image