இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையால் பிடிக்கப்பட்டு குருநகர் மீனவ சங்கத்திற்கு வழங்கப்பட்ட தமிழக மீனவர்களின் மேலும் ஒரு படகு நேற்றைய தினம் குருநகரை வந்தடைந்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையால் பிடிக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது 3 படகுகளை வடக்கு மீனவ அமைப்புகளிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி எல்லைதாண்டும் தமிழக மீனவர்களை பிடிக்கவும் இடிக்கவும் பயன்படுத்த அறிவுறுத்தியிருந்தார்.
இவ்வாறு 3 சங்கங்களிற்கு வழங்கப்பட்ட படகில் ஒன்றே நேற்றைய தினம் குருநகர்ப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு நங்கூரம் இடப்பட்டுள்ளது.
இதேநேரம் முல்லைத்தீவிற்கு வழங்கப்பட்ட படகு 3 நாள்களிலேயே கடலில் முழுமையாக மூழ்கிவிட்டது.
இதேநேரம் 3வது படகு வழங்கப்பட்ட சங்கம் தமிழக மீனவர்களின் படகு தமக்கு வேண்டாம் எனத் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
TL