இந்தியாவின் நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் சரமாரி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் நான்கு இந்திய மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்த தமிழக மீனவர்களில் ஒருவர் மூன்று விரலையும் இழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் கரை திரும்பியதும் பெரும் பதற்றம் நிலவுவதோடு இலங்கையர்கள் என கருதப்படுவோர் 3 படகில் 10 மேற்பட்டோரே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தமிழக மீனவர்களின் ஜி.பி.எஸ் மற்றும் தொலைத் தொடர்பு சாதனம் ஆகியவற்றையும் அபகிரித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
TL