தமிழகத்தில் இருந்து வந்த மீனவர்களின் 4 படகிற்கான வழக்குகள் நேற்று இடம்பெற்றதோடு மேலும் 4 படகுகளின் வழக்கு 31ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 17 படகுகளிற்கான வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் அழைக்கப்பட்டது. இதன்போதே இவ்வாறு திகதியிடப்பட்டன.
யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட 17 படகுகள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு திகதிகள் இடப்பட்டன.
இதேநேரம் இந்த 17 படகுகளில் 2021 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட 3 படகுகளின் உரிமையாளர்கள் இதுவரை நீதிமன்றில் முற்படாத நிலையில் அவை அரச உடமையாக்கப்பட்டது. இதேபோன்று எஞ்சிய ஆறு படகுகளிற்கான விசாரணைக்கு மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு திகதியிடப்பட்டதோடு 2023-01-27 விசாரணை முடிவுற்ற 4 படகுகளிற்கான தீர்ப்பும. மார்ச் மாதம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது.
TL