Home » தமிழக மீனவர் படகை சீர் செய்து வழியனுப்பிய கடற்படை.

தமிழக மீனவர் படகை சீர் செய்து வழியனுப்பிய கடற்படை.

Source

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சேகர் பாண்டியன்  என்பவருக்கு சொந்தமான விசைப்படகு  நேற்று முன்தினம்  இரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றது.

இந்த நிலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு இஞ்சின் கோளாறு காரணமாக பழுது அடைந்ததை அடுத்து அதிலிருந்த ஆறு மீனவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல்  திகைத்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து காற்றின் வேகத்தின் காரணமாக பழுதான விசைப்படகு இலங்கை கடல் பகுதியான மன்னார் பகுதிக்கு இழுத்து வந்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு ரோந்து சென்ற  இலங்கை கடற்படை  ராமேஸ்வரம் மீனவர்களின் படகை மூன்று திருத்துநர்கள்  மூலம் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதோடு மீனவர்களின்  பசியையும் போக்க உணவு, பிஸ்கட், தண்ணீர் கொடுத்து இலங்கை கடற்படை உபசரித்துள்ளனர்.

இதையடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்களுக்கு இலங்கை கடற்படை தங்கள் பகுதி மீனவரின் படகு பழுதாகி உள்ளதாக தகவல் கொடுக்கப்பட்டு அதன் பின்னர் கயிறு கட்டி கொண்டு வந்து கொண்டிருந்தபோது சக மீனவர்கள் அந்த படகை தேடி சென்ற நிலையில் அவர்களிடம் ஒப்படைத்து வழி அனுப்பி வைத்தனர்.

மேலும் பழுதான படகில் ஆறு மீனவர்கள் இருந்த நிலையில் அவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்தபோது தாங்கள் தங்களுடைய குடும்பங்களை விட்டு சிறைக்கு சென்று விடுவோம் என்ற மனநிலையில்  இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படை அவர்களுடைய படகை சீர் செய்ய  முற்பட்டதோடு அவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட், உணவு கொடுத்து உபசரித்து வழி அனுப்பி வைத்து உள்ளதால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image