தமிழர் தாயகத்தில் செயலுருப்பெறும் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு சிறீதரன் எம்.பி.அழைப்பு…!!!
- தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வலியுறுத்தல்.
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுத்தல்.
- அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வலியுறுத்தல்.
- சமகாலத்தில் இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்த அரச திணைக்களங்களால், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தல்.
- அட்டைப் பண்ணைகள், இறால் பண்ணைகள் அமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கடல்வள அபகரிப்பை கைவிடக் கோரல்.
- சீன நாட்டின் முதலீட்டாளர்களுக்கு கிளிநொச்சியின் காணிகளை தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்தல்.