தமிழ்நாட்டிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் கப்பல் சேவை

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இருந்து காங்கேசன்துறை வரை கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. மக்களுக்குத் தேவையான எரிபொருள், பசளை, பால்மா, மருந்துப்பொருட்கள் என்பவற்றை நியாயமான விலையில் வழங்க இது துணைபுரியும்.
