வடக்கில் உள்ள தமிழ் அமைச்சர் எம்மை பிரித்து தான் நன்மை அடைய முயற்சிப்பதாலேயே ஜனாதிபதியை நேரில் சந்திக்க எண்ணியுள்ளோம் என கடற்றொழிலாளர் பி்ரதிநிதி அ.அன்னராசா தெரிவித்தார்.
இலங்கை கடற்றொழில் அமைச்சின் தீர்மானத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய வடக்கு மாகாண மீனவ அமைப்புக்கள் பல வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்துத்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணம் பிள்ளையார் விடுதியில் இடம்பெற்ற இச் சந்திப்பில் 30இற்கும் மேற்பட்ட கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் செ.கஜேந்திரனின் பிரதிநிதியும் கலந்துகொண்டதோடு பல்கலைக் கழக விரிவுலையாளர் அகிலன் கதிர்காமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஊர்காவற்றுறை க.தொ.சங்கத் தலைவர் அ.அன்னராசா தனது தலைமை உரையில்,
இந்திய இலங்கை மீனவர்களிடையே உள்ள எல்லை தாண்டிய பிரச்சினை 2023 ஆம் ஆண்டு வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள மிகப் பெரிய பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் 2023-02-22 அன்று நாடாளுமன்றில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த வெளிநாட்டுப் படகுகளிற்கான அனுமதி வழங்கும் விடயத்தின் எதிரொளி போன்றவற்றுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொண்டு வந்து நிறைவேற்றிய தனிநபர் சட்டமூலத்தை அமுல்ப்படுத்துவது போன்றவற்றுடன் இன்று மேற்கொள்ள வேண்டிய வழி வகை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீனவர்கள், புத்திஜீவிகள் ஆகிய முத்தரப்பையும் இணைத்து இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலே மாறி மாறி பல இடங்கள் தாரை வார்ப்பதோடு ஒரு சம்பவத்தை மறைப்பதற்காக இன்னுமொரு சம்பவத்தை அரசு உருவாக்கி வருகின்றது. வடக்கில் உள்ள தமிழ் அமைச்சர் மேல் எமக்கு நம்பிக்கை இல்லை. அவர் எம்மை பிரித்து தான் நினைத்தவற்றை சாதிக்க துடிப்பதனாலேயே நாம் நேரடியாக ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம்.
வடக்கில் உள்ள 50 ஆயிரம் குடும்ப கடற்றொழிலாளர்களின் பிரச்சணைக்கும் ஓர் அடித்தளமாக இந்தச் சந்திப்பு அமைய வேண்டும் என்றார்.
TL