சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையும் தமிழ் சிங்கள புத்தாண்டு ,ன்று உதயமாகவுள்ளது. அறுபது ஆண்டுகளைக் கொண்ட தமிழர்களின் வருடச் சக்கரத்தில் 37 ஆவது ,டத்தில் ,ருக்கும் சோபகிருது வருடம் ,ன்று பிறக்கவுள்ளது.
புதுவருடம் ,ன்று பிற்பகல் 2.59,ற்குப் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும், பிற்பகல் 2.03 ,ற்கு பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும் கூறுகின்றன.
திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், ,ன்று முற்பகல் 10.59 தொடக்கம் மாலை 6.59 வரை விஷூ புண்ணிய காலமாகும். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், ,ன்றைய தினம் முற்பகல் 10.03 தொடக்கம் பிற்பகல் 06.03 வரை புண்ணிய காலமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ,ந்தக் காலப்பகுதியில் தலையில் கொன்றை ,லையும், காலில் புங்க ,லையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராடுதல் நலம் என்பார்கள்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், கைவிசேஷம் சனிக்கிழமை காலை 6.45 முதல் 7.30 மணி வரையிலான காலப்பகுதியிலும், காலை 8.00 மணி முதல் 8.55 வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் 9.30 வரையிலும், அன்றைய தினம் நண்பகல் 12.10 முதல் 1.15 வரையிலுமான காலப்பகுதியிலும் பொருத்தமானது.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, கைவிசேஷம் சனிக்கிழமை காலை 7.52 முதல் 09.00 மணி வரையிலான காலப்பகுதியிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 7.49 முதல் 9.48 வரையிலான காலப்பகுதியிலும் பொருத்தமானது.
புத்தாண்டில் வெள்ளை நிறமுடைய அல்லது வெள்ளைக் கரை அமைந்த பட்டாடைகளை அணிவது சிறப்பானதாகும்.