தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகைதரும் வர்த்தகர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி.

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு, மரக்கறி மற்றும் பழவகைகளை கொள்வனவு செய்ய வருகைதரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மரக்கறிகளின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்றவை இதற்கான காரணமாகும்.
இன்று முற்பகல் தக்காளி ஒரு கிலோவின் விலை 600 ரூபாவாகவும், போஞ்சி ஒரு கிலோவின் விலை 550 ரூபாவாகவும் காணப்பட்டது. இதேவேளை, 400 ரூபாவிற்கும் குறைவாக இருந்த யாழ்ப்பாண திராட்சை ஒரு கிலோவின் விலை, ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. விவசாயிகள் மரக்கறி செய்கையிலிருந்து விலகியிருப்பதனால், அறுவடை குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
