Home » தம்மிக்கவின் மகளுக்கு பல முன்னணி நிர்வாகப் பொறுப்புகள்

தம்மிக்கவின் மகளுக்கு பல முன்னணி நிர்வாகப் பொறுப்புகள்

Source

இலங்கை வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் மூத்த மகள் டோனா பிரிந்தினி பெரேரா, பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் வாரியங்களுக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெய்லி எப்டி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக நியமனத்தை மேற்கொள்வதற்காக ஜூன் மாதம் தம்மிக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த நிறுவனங்களின் வாரியத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.

பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் வாரியங்களின் உரிமை தம்மிக்க பெரேராவினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

Vallibel One PLC, Hayley’s Group, Haycarb PLC, Dipped Products PLC, Singer Sri Lanka PLC, The Kingsbury PLC, Hayleys Leisure PLC, மற்றும் Hayleys Fabric PLC அத்துடன் Lanka Walltiles PLC, Lankatiles PLC, மற்றும் Royal Ceramics PLC நிறுவனங்கள் அவையாகும்.

தம்மிக பெரேராவின் மகள் டோனா, 22 வயதில், பட்டியலிடப்பட்ட நிறுவன வாரியங்களில் நிறைவேற்று அல்லாத, சுயாதீனமற்ற இயக்குநராக பணியாற்றும் இளையவர் ஆவார்.

அவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அது உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை, தொழில்முனைவு, பெருநிறுவன நிதி, புள்ளியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image