தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்.

இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
