தம்மை கைது செய்வதை தடுக்குமாறு ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ மனுத்தாக்கல்.

தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடக்கோரி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் தம்மை சந்தேகநபராக பெயரிட்டு, சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனுதாரரான ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இது சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டு, அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தம்மை கைது செய்வதை தடுப்பதற்கான பணிப்புரையை விடுக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மாஅதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
